COVAX திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் 1.5 மில்லியன் Moderna தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று காலை 9.30 அளவில் நாட்டை வந்தடைந்தது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
MRNA தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிக்கு சமமான அளவில் செயற்றிறனைக் கொண்டதாக Moderna COVID-19 தடுப்பூசி காணப்படுவதாக சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இவற்றை கண்டி மாவட்டத்திற்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
